வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 713 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
முருங்கன் வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேர் என, மன்னார் மாவட்டத்தில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.




