ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சஞ்சய் ராஜரத்தினம் 34 ஆண்டுகளாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார். பதில் மன்றாடியார் நாயகம், மூத்த மேலதிக மன்றாடியார் நாயகம், , பிரதி மன்றாடியார் நாயகம் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரி, பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவராக சஞ்சய் ராஜரத்தினம் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மேற்கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1