ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியும் எப்படிப்பட்ட குணம் கொண்டவை என்பது குறித்து பல்வேறு விஷயங்கள் விளக்குகின்றன. இதில் சில ராசிகள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பிரச்சினைகளைக் கண்டும் அஞ்சாமல் சமாளிப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் 4 ராசிகள் எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய தைரியத்துடன் இருப்பார்கள்.
அந்த வகையில் அஞ்சாமல் எல்லா விஷயத்திலும் தைரியத்துடன் செயல்படக்கூடிய நான்கு ராசிகளை இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். இவர் போரிடும் குணம், கோபம், முரட்டுத்தனம், சண்டை குணம், ஆக்கிரமிப்பு, ரத்தம் சிந்துதல், காயங்கள், போன்றவை அடங்கியதாகும்.
இதன் காரணமாக உங்கள் ராசிக்கு இயற்கையிலேயே எதையும் தாங்கும் குணத்துடன் இருப்பார்கள். மேலும் எந்த விஷயத்திற்காகவும் சோர்ந்து போகாமல் போர் வீரர் போல அடுத்த நிலைக்கு முன்னேற துடிப்பார்கள். இந்த ராசியினர் பார்க்க பெரிய உடல் வலிமை உள்ளவராக இருப்பர் அல்லது மன வலிமையுடன் இருக்கக்கூடியவர்கள். இதனால் அஞ்சா நெஞ்சுடன் எந்த விஷயத்தையும் சமாளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவர் சுகாதிபதி. ஆடம்பரம், சுகத்தை தரக்கூடியவராக, அதனை எதிர்பார்ப்பவராக ரிஷப ராசியினர் இருப்பார்கள். ஆனால் அப்படி மட்டும் தான் இருப்பார்கள் என கூறமுடியாது. மாறாக இவர்கள் வாழ்வில் பலவித சிரமங்களை எதிர்கொண்டு அவற்றில் தனக்கும், மற்றவர்களுக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாதவாறு சமாளித்து முன்னேற விரும்புபவர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான அதிபதி சூரியன். ஜோதிடத்தின் படி, சூரியன் ஆட்சி செய்யக்கூடிய ஒரே ராசி சிம்மம். இவர் பொதுவாக ஆட்சி, அதிகாரம், ஆளுமை, ஒரு விஷயத்தை சிறப்பாக கையாளுதல் போன்ற அடிப்படை குணத்தை கொடுக்கக்கூடியவர்.
இதன் காரணமாக இவர் சிம்ம ராசிக்கு எந்த ஒரு பிரச்னை வந்தால், அதை சமாளிக்க அல்லது வெற்றி கொள்ள தன் மனம் மற்றும் உடலை ஒருமித்து செயல்படுவர். அதோடு செவ்வாய் கிரகம் இவர்களுக்கு வலுவாக இருந்தால் இவர்களின் மனமும், உடலும், மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல வெற்றிகளை குவிப்பார்கள்.
தனுசு
ஜோதிடத்தின் படி, தனுசு ராசிக்கு அதிபதி குரு. இவர்கள் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதனை குருவின் மிக நேர்த்தியாக சமாளிக்கக்கூடிய தெளிவான அறிவு கொண்டு அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட்டு சமாளிப்பார்கள்.
தனுசு ராசி பிடிக்க இந்த 7 முக்கிய காரணங்கள் தான் காரணம் தெரியுமா?
பல போராட்டங்கள் இருந்தாலும் வெற்றியை மட்டுமே அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் போராடி வெல்லக்கூடியவர்கள்.