குக் வித் கோமாளி புகழ் தற்போது லாக் டவுனில் கார் கழுவும் வேலையை செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் கார் கழுவும் இடத்தில் வேலை செய்தது நினைவுக்கு வந்ததாக கூறி உள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் சமீபத்தில் சொந்தமாக ஒரு கார் வாங்கி இருந்தார். அப்போது அவர் மிகவும் உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். தான் ஒரு காலத்தில் கார் வாஷ் செய்யும் கடையில் பணியாற்றியதாகவும், அங்கிருந்து படிப்படியாக முன்னேறி தற்போது சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதாக மிகவும் எமோஷ்னலாக பேசினார்.
இந்த வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறி இருந்தார் அவர்.
தற்போது கொரோனா லாக்டவுனில் புகழ் தனது காரை கழுவி இருக்கிறார். தனது பழைய நினைவுகளை இது மீண்டும் கொண்டுவந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் கார் வாஷில் வேலை செய்தபோது உடன் இருந்த நண்பரும் தற்போது புகழுடன் இருக்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசிக்கொள்கின்றனர்.
இந்த வீடியோவை புகழ் தற்போது அவரது youtube சேனலில் வெளியிட்டு இருக்கிறார்