நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணா பட்டினத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நாட்டு மருந்து வழங்கும் இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நோயாளிகளுக்கு மருந்து தயாரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டினம் பகுதியில் நாட்டு மருந்து வழங்கும் இடத்தை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சோமி ரெட்டி தலைமையில் நேற்றுமாலை ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணா பட்டினத்தில் உள்ள ஆனந்தய்யா வீட்டிற்குச் சென்று நாட்டு மருந்து குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் மருந்து தயாரிக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மல்லா ரெட்டி என்ற பட்டதாரி இளைஞன் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சுவாசப் பிரச்சனை யுடன் அங்கு வந்தார்.
இதனை கவனித்த ஆனந்தயா குடும்பத்தினர் அவருக்கு கண்ணில் நாட்டு சொட்டு மருந்து இட்டனர். இதனை அடுத்த 15 நிமிடத்தில் அந்த இளைஞன் எழுந்து நின்று சுவாசக்கோளாறு இல்லை என்றும் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் கடந்த 20 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சுவாச பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்தவித பயனும் இல்லாததால் நாட்டு மருந்து விஷயம் கேள்விப்பட்டு தனது தாயுடன் ஆனந்தையாவை சந்தித்த ஒருவர், மருந்து பெற்றுக் கொண்டவுடன் நோய் குணமான உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆந்திர மாநில அரசு உடனடியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நாட்டு மருந்து தயாரித்து வழங்க வேண்டும் என பட்டதாரி இளைஞன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அங்கு வந்த எம்எல்ஏ சோமி ரெட்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதில் ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்துதை ஆயுஷ் அங்கீகரித்துள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில் ஐ சி எம் ஆர் இந்த மருந்தை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளது.
இந்த இந்த நாட்டு மருந்து காரணமாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பது ஆயுஷ் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் இந்த மருந்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ எம்பி க்கள் கூட இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுத்து இந்த மருந்தினை ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.