இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம்
அன்பர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும் வாய்ப்பு உண்டு, என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருப்பினும் அவைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அதிகபட்ச வேலைப்பளு ஏற்படும் என்றாலும் அவர்களை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்திலும் மேலதிகாரிகளிடமும் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். ஊதிய உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான அடித்தளமான நாளாக இன்றைய நாள் அமையும்.
ஒருசிலருக்கு அதிகபட்ச அலைச்சல்கள் ஏற்படும். இருப்பினும் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் ஒரு சிலர் வெளிநாடு செல்ல அல்லது வெளியூர் செல்ல வாய்ப்புகள் ஏற்படலாம் ஆனால் நன்மையே உண்டாகும்.
ரிஷபம்
அன்பர்களுக்கு கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். உயர்கல்விக்கு திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் தங்கள் எண்ணம் வெற்றி பெற காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.
நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை நிறைவேற்றி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல சூழ்நிலை இருந்து வரும். புதிய வாய்ப்புகளும் கிடைப்பதற்கு அமைப்பு ஒன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு பொருளாதாரத்தில் மேல் நிலையை அடைந்தார்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும்.
மிதுனம்
அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். உயர்கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
கல்விக்காக வெளிநாடு சென்று வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள் ஆகும். அது தொடர்பான முயற்சிகளை துவக்கலாம் இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
உத்தியோகத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பற்றாக்குறை மறையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல லாபம் பெறுவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கடகம்
அன்பர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும். பற்றாக்குறை இருந்து வரும்.
மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் என்றாலும் சற்று கூடுதல் முயற்சி தேவைப்படும். உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும். காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அன்னியோனியம் நன்றாக இருந்து வரும்.
வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வதும். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் இணைவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.
சிம்மம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை பொறுமையைக் கைக் கொள்ளவும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.
ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். பிற்பகலுக்கு மேல் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரப் பற்றாக் குறைகள் மறைவதற்கான நல்ல நாள் ஆகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும் இவர்களில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பிரிவினையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.
உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற சுப காரியங்களைப் பற்றி சிந்திக்கலாம் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும்.
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையில் இருக்கும்.
துலாம்
அன்பர்களுக்கு குடும்பத்தில் அன்யோன்யம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும். ஒரு சிலருக்கு இடம் விட்டு இடம் மாறுவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதாக இருக்கும்.
மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவிகள் கிடைத்து விடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுசரணையும் ஆதரவும் உண்டாகும் இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.
புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனங்கள் வாங்குவது மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பர் இவைகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களில் பண வரவு உண்டாகும்.
விருச்சிகம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தங்கள் வேலைகளில் மனநிம்மதியை காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிகரமாக தங்களுடைய தொழிலை செலுத்துவார்கள். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை முன்னேற்றமான சூழ்நிலையை நோக்கி நடத்துவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நல்ல நாள் ஆகும் தாங்கள் பிறந்த வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அல்லது ஒரு சிலர் பிறந்த வீட்டிற்கு சென்று வருவார்கள்.
ஆன்மீக மகான்கள் குருமார்களின் உடைய தரிசனம் கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் மகிழ்ச்சியுறும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு. வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.
உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். திருமணம் தொடர்பான காரியங்களை முன்னெடுக்கலாம் இவைகளில் வெற்றி பெறுவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்கள் தங்கள் திருமணம் சம்பந்தமாக பெற்றோருடன் பேசி நல்லதொரு முடிவை எடுப்பதற்கு இணக்கமான நாளாகும்.
மகரம்
அன்பர்களுக்கு இன்று இனிமையான நாள் ஆகும். மேலும் விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து பொருளாதாரத்தில் இருந்துவந்த பற்றாக்குறை மறையும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் காண்பவர்கள் முன்னேற்றமடைவார்கள்.
பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். கல்வியில் மாணவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். படிப்பை முடித்து வேலை வாய்ப்பிற்காக எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
கும்பம்
நேயர்களுக்கு கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள். வெளிநாடுகளில் நீண்ட காலம் இருந்து தாய்நாடு திரும்ப முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
கோவில் செல்லுதல் ஆன்மீக மகான்கள் தரிசனம் பெரியோர்களின் ஆசிர்வாதம் போன்றவை கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டில் இருந்தும் குடும்பத்திலிருந்தும் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உடன்பிறந்தவர்கள் மற்றும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாள் ஆகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
மீனம்
மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்துவரும். இருப்பதும் கூடுதல் முயற்சி செய்வதால் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி இவர்கள் செல்வார்கள். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை நிலவி வரும்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தங்களது வேலையில் மனநிம்மதியை பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைய கூடிய நல்ல நாளாகும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்கள் தொழிலுக்கு உதவிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இனிய நாள் ஆகும்.
திருமணம் தொடர்பான முயற்சிகள் அனைத்து பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அது தொடர்பான தகவல்களும் வந்து சேரும் இவைகளால் வெற்றியும் ஆதாயமும் உண்டாகும்.