உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முககவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிலர் சொந்த நகைச்சுவையான காரியங்களை செய்கிறார்கள். இந்நிலையில் சித்தாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூகாது பாபா என்ற சன்னியாசி நூலால் சுற்றப்பட்ட முககவசத்தை அணிந்துள்ளார். அதனுள் வேப்பிலை மற்றும் துளசி இலையை வைத்து அதனை தனது முகத்தில் முககவசமாக அணிந்துள்ளார்.
Not sure this #MASK WILL HELP.
जुगाड़☺️☺️
Still #मजबूरी_का_नाम_महात्मा_गांधी#NECESSITY_is_the_mother_of_JUGAAD #Mask And Medicine😂🤣😷😷😷 pic.twitter.com/uHcHPIBy9D— Rupin Sharma IPS (@rupin1992) May 22, 2021
மருத்துவக் குணம் வாய்ந்த இரு இலைகளையும் வைத்து தானே இந்த முகக்கவசத்தை உருவாக்கியதாக ஜூகாது பாபா தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், உத்தரபிரதேசத்தின் சித்தாப்பூரை சேர்ந்த ஒரு முதியவர் வேப்பம் மற்றும் துளசி இலைகள் நிரப்பப்பட்ட முகமூடியை அணிந்திருப்பதைக் காணலாம். இந்த முகமூடி உதவும் என்று உறுதியாக தெரியவில்லை என கூறி உள்ளார்.