25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
கிழக்கு

பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்

பாடசாலை ஒன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்களை கொள்ளையிட்ட மூவர் உட்பட  நால்வரை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மலையடி கிராமம் அல் அர்சாத்  பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி உபகரணங்கள் பல களவாடப்பட்டுள்ளதாக   18.05.2021 அன்று பாடசாலை அதிபரினால்  சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய செவ்வாய்க்கிழமை(25) காலை   அம்பாறை  சம்மாந்துறை  பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய    சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கே.சதிஸ்கர் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜனோசன்   தலைமையில்  சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களான  ஜெயகுமார் துரைசிங்கம்  குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால்  கொள்ளையர் குழு மூவர் களவாடப்பட்ட பொருளை கொள்வனவு செய்த மற்றுமொருவர் உள்ளடங்கலாக நால்வரை  கைது செய்தனர்.

கைதான கொள்ளையர் குழு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் 23 ,25, 21  வயதினை உடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த கொரோனா அனர்த்தம் ஆரம்பமான காலத்தில் இருந்து  இக்குழு  இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் களவாடப்பட்ட பொருட்கள்  3 இலட்சத்திற்கும் அதிகளவான பெறுமதியானதாகவும் இதில்  நிழற்பிரதி இயந்திரம் கணனி உபகரணங்கள் மைக்குகள் கொரோனா வெப்பநிலை இயந்திரம் உள்ளிட்ட  பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதான நால்வரும் இன்றைய தினம்(25) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஈஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-dilan-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

east tamil

பெண்மீது சினிமா பாணி தாக்குதல்: கோடீஸ்வரன் எம்.பி கொந்தளிப்பு

east tamil

கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு

east tamil

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான்

east tamil

மட்டக்களப்பில் க்ளீன் சிறிலங்கா செயலமர்வு: அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்

east tamil

Leave a Comment