24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா; மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு செயலர் திடீர் விசிட்!

நீண்டகாலமாக நின்றுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைக்க இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அழுத்தம்  கொடுக்க அமரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு செல்கிறார்.

இஸ்ரேல், மேற்குக் கரை, ஜோர்டான் மற்றும் எகிப்துக்கான ஒரு குறுகிய பயணத்திற்காக இன்று ஆண்டனி பிளிங்கன் புறப்படுவதாக ஜனாதிபதி ஜோ பிடென் அறிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் வெடித்த இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்து பிடென் நிர்வாகத்தின் சார்பாக ஆண்டனி பிளிங்கன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அறிக்கையில், பிடென் பிராந்திய நாடுகளுடன் இணைந்து உடனடி உதவி காசாவை அடைவதை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சியை உறுதி செய்வதாகவும், மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்தும் இந்த பயணம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அமெரிக்காவில் கடும் விமர்சனத்திற்குள்ளான பிடென் நிர்வாகம், எகிப்திய மத்தியஸ்தத்திற்குப் பிறகு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போர்நிறுத்தத்தை ஆதரிப்பதற்காக தீவிரமான, ஆனால் அமைதியான, உயர்மட்ட இராஜதந்திரத்தில் ஈடுபட்டதாகக் கூறி தனது பதிலைப் அளித்துள்ளது.

பிடென் தலைமையிலான திரைக்குப் பின்னால் இருந்த முயற்சி பலனளித்தது. 11 நாட்களுக்குப் பிறகு சண்டை முடிவுக்கு வந்தது என்று பிளிங்கன் நேற்று கூறினார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் உடனடியாக மீண்டும் தொடங்குவதற்கான நேரம் சரியாக இல்லை. ஆனால் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலிருந்து ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய மட்டுமே நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

Leave a Comment