விவோ நிறுவனம் தனது விவோ TWS 2 மற்றும் விவோ TWS 2e வயர்லெஸ் இயர்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ TWS 2 இயர்பட்ஸ் விலை 499 யுவான் (தோராயமாக ரூ.5,500) ஆகவும் மற்றும் விவோ TWS 2e இயர்பட்ஸின் விலை 299 யுவான் (தோராயமாக ரூ.3,400) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டும் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் மூன் ஒயிட் வண்ணங்களில் வருகின்றன.
சாதனங்களுடன் இணைக்க விவோ TWS 2 மற்றும் TWS 2e இயர்பட்ஸ் இரண்டும் ப்ளூடூத் 5.2 அம்சத்துடன் வருகிறது. TWS 2 aptX அடாப்டிவ் / AAC மற்றும் TWS 2e இயர்பட்ஸ் AAC உடன் சாதனங்களுடன் இணைப்பு திறன் இதில் உள்ளது.
பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, விவோ TWS 2 இயர்பட்ஸ் 45 mAh பேட்டரி உடன் 8 மணிநேரம் (ANC இல்லாமல்) / 4.5 மணிநேரம் (ஏஎன்சியுடன்) வரையிலும் மியூசிக் பிளேபேக் வழங்கும் மற்றும் சார்ஜிங் கேஸ் உடன் மொத்தம் 30 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டது.
TWS 2e இயர்பட்ஸ் 7.6 மணிநேர மியூசிக் பிளேபேக் மற்றும் சார்ஜிங் கேஸ் உடன் 27 மணிநேர பிளேபேக்கை 45 mAh பேட்டரி வழங்கும்.
சிறந்த ஆடியோ வெளியீட்டிற்காக இயர்போன்கள் 12.2 மிமீ டிரைவர்களுடன் வருகின்றன. கேமிங் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு TWS 2e இயர்போனில் 117ms குறைந்த லேட்டன்சியும், TWS 2e இயர்போனில் 88ms குறைந்த லேட்டன்சி கேமிங் பயன்முறை உள்ளது. இயர்பட்ஸ் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP54- மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
ஒலி அளவு மற்றும் பாடல் மாற்றத்திற்காக இயர்பட்ஸ் தொடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. டீப், நார்மல் மற்றும் மைல்டு பயன்முறையில் 40 dB வரை அறிவார்ந்த முறையில் இரைச்சலைக் குறைப்பதற்கான மூன்று மைக்ரோஃபோன்களும் உள்ளன.
TWS 2e இயர்போனில் ஒன்-டச் ட்ரான்ஸ்பரண்ட் பயன்முறையும் உள்ளது, இது மைக் மூலம் குரல் மற்றும் பிற தகவல்களை பெற முடியும்.