நேற்றுமுன்தினம் ராத்திரி முதல் பற்றிக் கொண்டு எரியும் செய்தி ஒன்றுதான். பத்ம சேஷாத்ரி என்று சென்னையில் ஒரு பள்ளி இருக்கிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆன்லைன் கிளாஸில் தகாத முறையில் நடந்து கொண்டதாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது.
இதை காது கொடுத்து கேட்ட அரசாங்கம், உடனடியாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த பல விவாதங்களும், விமர்சனங்களும் கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. ட்விட்டர் வலைத்தளத்தில் நர்சிம் என்பவர், “ராட்சசன் படம் வந்தப்ப, மாணவிகளின் பெற்றோர் எவ்வளவு பயப்படுவாங்க இதெல்லாம் தவறான படம்னு வாதம் செய்தேன். மிகக்கடுமையான தண்டனை என்பது முதல் தேவை. அடுத்து, எப்படி, என்ன செய்தால் இவற்றை தடுக்கலாம் என்ற ஆய்வும் முன்னெடுப்பும் மிக அவசியம்” என பதிவிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார், “ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்” என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்துள்ளார்