விபத்துக்கு உள்ளான ராகலை ஸ்டாபோட் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் மத்துரடுட பெருந்தோட்டக் தோட்ட கம்பெனி நிர்வாகத்துடன், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலாளர் வி.புஸ்பானந்தன் இன்று பேச்சு நடத்தினார்
கம்பனி நிர்வாகத்திடம் தான் விளக்கம் கேட்டதை தொடர்ந்து, இன்றைய பேச்சு நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பு பேச்சை தொடர்ந்து, பதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் அவர்களுக்கு தேவையான காப்புறுதியை உடனடியாக தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதான தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1