பாடகி மதுப்பிரியா தனக்கு கடந்த இரண்டு மாதமாக போனில் வந்த தவறான கால்கள் பற்றி பொலீசில் புகார் அளித்து உள்ளார்.
பிரபல பாடகி மதுப்பிரியாவுக்கு போனில் தவறான அழைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்டுகள் வந்ததால் அது பற்றி பொலீசில் புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனில் கலந்துகொண்ட அவர் இப்படி ஒரு புகாரை தற்போது கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. மதுப்பிரியா தெலுங்குல பல பாடல்கள் பாடி உள்ளார்.
அவருக்கு தினம்தோறும் தெரியாத நம்பர்களில் இருந்து அதிக அளவு போன் கால்கள் வந்துகொண்டே இருந்ததாம், அது நிற்காததால் வேறு வழியின்றி அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். கடந்த இரண்டு மாதமாக இப்படி நடந்து வந்ததாக அவர் கூறியதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.
இது பற்றி போலிசார் IPC 509 மற்றும் 354(B) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுப்ப்ரியாவுக்கு தொடர்ந்து போனில் தொல்லை கொடுத்த நம்பர்களையும் போலீசிடம் கொடுத்திருக்கிறாறாராம். அதை வைத்து போலீசார் அந்த நபர்களை கண்டுபிடித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலங்களுக்கு இப்படி தொல்லைகள் வருவது வாடிக்கையாகிவிட்ட இந்த காலகட்டத்தில் அதை பற்றி போலீசில் தைரியமாக புகார் அளித்த மதுப்பிரியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.