சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம டிடி தான். எந்த ஒரு தொகுப்பாளினிக்கும் இல்லாத ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழகும் விதமே அவ்வளவு கலகலப்பாக அழகாக இருக்கும் என்பதால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள்.
தற்போது டிடி விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும், Dancing Superstars நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இவருக்கு 2014 – ஆம் ஆண்டு ஶ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்னும் நபரோடு திருமணம் நடந்தது. சில வருடங்களில் இருவருக்கும் ஒத்துபோகாமல், விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
அதன் பின் DD – திருமணம் ஆகாமல் அப்படியே இருக்க, ஶ்ரீகாந்த் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இது தான் உங்கள் மனைவியா என்று கேள்வி கேட்க, அவரும் அதற்கு ஆம் என்பது போலதான் பதிலளிக்கிறார்.