25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் (24 மே 2021)

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும். கல்வியை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்நாட்டை விட்டு தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

ஒரு சிலர் கடன் வாங்கி வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள் இவற்றில் வெற்றி உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

நிர்வாகத்தில் நம்பிக்கையையும் பெற்று விடுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றத்தை முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் இன்று நல்ல தகவலை பெறுவார்கள் இடமாற்றத்திற்கான முயற்சிகளை இன்று துவக்கலாம்.

 

ரிஷபம்

அன்பர்களுக்கு இன்றைய நாள். மன மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள் ஆகும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்பார்க்கும் நாள் ஆகும்.

பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவர்.

விசா தொடர்பான காரியங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். இம்மாதிரியான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைய கூடிய நிகழ்வுகள் உண்டு. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

 

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பார்த்த தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். புதியதாக சேர விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் நல்ல வாய்ப்புகள் போன்றவை அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வாகன வகையில் ஆதாயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்கு பணம் வந்து சேரும். எதிர்கால வளர்ச்சிக்காக முதலீடு செய்வதில் எண்ணமும் செயல்பாடுகளும் செல்லும்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும். உத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் புதிய முதலீடுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும்.

பிரிவினையை நோக்கி சென்றுகொண்டிருந்த குடும்பங்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மனதில் அதிகமாக ஓடும். சொத்துக்கள் வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும்.

 

சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு. ஒரு சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களை பிடித்து உட்கார வைத்து படிக்க வைக்க வேண்டும்.

உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி கல்வியை எடுத்துச் செல்வார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்கும்.

பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உங்கள் திறமைக்கு சரியான மதிப்பு கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு. கல்வியில் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயமடைவீர்கள்.

உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும் பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் இன்று நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

வெளிநாடுகளிலிருந்து பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் கல்வியில் சற்று சிரமத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்கள்.பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு அவைகளில் வெற்றி அடைவீர்கள். தொழில் துவங்க பலருக்கு மனதில் எண்ணம் ஏற்படும். இவற்றில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். அவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர் நல்ல தகவல்கள் கிடைக்கப்பெறுவார்கள். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

ஆராய்ச்சிப் படிப்புகளில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழிகாட்டிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் வெற்றியடைய நல்ல தகவல்கள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன வரவுக்கு வழி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய பல காரியங்கள் உங்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு இருக்கும். அடித்தளமாக அமையும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளில் வெற்றி கிடைக்க அமைப்பு உள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள். முன்னேற்றத்தை காண்பார்கள் மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். உயர்கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவைகளால் நன்மையே விளையும் என்பதால் பயணத்தை மேற்கொள்ள நல்லது.

சொத்துக்கள் விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றி அடைவார்கள்.

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான காலமாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் சுப காரியங்களைப் பற்றியான பேச்சுவார்த்தைகளைத் துவங்குவீர்கள்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

மீனம்

நேயர்களுக்கு இன்றைய நாள். பேச்சில் நிதானம் தேவை. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment