25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

64MP குவாட் கேமராவுடன் ஓப்போ ரெனோ 5A ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஓப்போ ஜப்பானிய சந்தையில் ஓப்போ ரெனோ 5A என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தொலைபேசியில் 64 MP பின்புற குவாட் கேமரா அமைப்பு, 32 MP செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 OS, 4000 mAh பேட்டரி போன்ற பல அம்சங்கள் உள்ளன.

புதிய ஸ்மார்ட்போனுக்கான விலை விவரங்களை நிறுவனம் அறிவிக்கவில்லை. இது கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஓப்போ ரெனோ 5A விவரக்குறிப்புகள்

ஓப்போ ரெனோ 5A 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி சிப்செட் மூலம் அட்ரினோ 620 GPU உடன் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, தொலைபேசியில் 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், இது 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

ஓப்போ ரெனோ 5A ஆண்ட்ராய்டு 11 இல் கலர் OS 11.1 உடன் இயங்குகிறது. தொலைபேசி 4000 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. இது பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் 5ஜி SA / NSA, இரட்டை 4ஜி VoLTE, வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS, NFC, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment