29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
சினிமா

நேற்றைய தினம் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம் ; நடிகர் மனோபாலா வருத்தத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ!

நேற்றைய தினம் மக்கள் கூட்டமாக, மாஸ்க் கூட அணியாமல் கடைகளில் அலை மோதியது குறித்து நடிகர் மனோபாலா வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மக்கள் பொது வெளியில் தேவையின்றி மக்கள் நடமாடுவதாள், இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதனையடுத்து நேற்றைய தினம் மக்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க தளர்வுகள் அறிவித்தது தமிழக அரசு. அதனை தொடர்ந்து அடுத்த சில தினங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. மளிகை கடைகளில் மட்டும் அல்லாமல் ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. இந்நிகழ்வு சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

மக்கள் மத்தியில் இன்னமும் கொரோனா குறித்த அச்சமும், விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகர்மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். கடைகளில் காணப்பட்ட அதிகமான கூட்டத்தை பார்த்தபோது தனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதாக அவர் தன்னுடைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், நேற்றைய தினம் சென்னையில் உள்ள மொத்த மக்களும் சாலைகளில்தான் இருந்ததாகவும், தமிழக அரசு கொரோனாவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல் மாஸ்க் கூட அணியாமல் முண்டியடித்து கடைகளின் முன்பு கூட்டம் கூட்டமாக நின்றதை பார்க்கும் போது வேதனையாக இருந்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் மனோபாலா.

ஏதோ நாளையே உலகம் அழிவதை போல் மக்கள் பொருட்களை வாங்கி குவித்ததாகவும், இந்த அலட்சிய போக்கு நமக்கு மிகப்பெரிய பின் விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் நமக்கு சுய பொறுப்பு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தயவு செய்து மாஸ்க்கை முறையாக அணிந்து, அவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மனோபாலா.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!