நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவானவர்கள்.
நாட்டில் நேற்று 2,959 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 164,201 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 554 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கம்பஹா மாவட்டத்தில் 391 பேரும், காலி மாவட்டத்தில் 198 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 179 பேர், களுத்துறை மாவட்டத்தில் 174 பேர், புத்தளம் மாவட்டத்தில் 152 பேர், மாத்தறை மாவட்டத்தில் 134 பேர், மாத்தளை மாவட்டத்தில் 125 பேர், கண்டி மாவட்டத்தில் 105 பேர், கேகாலை மாவட்டத்தில் 103 பேர், குருநாகல் மாவட்டத்தில் 83 பேர், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தலா 60 பேர், மன்னார் மாவட்டத்தில் 34 பேர், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலா 31 பேர், மொனராகலை மாவட்டத்தில் 27 பேர், பொலன்னருவை மாவட்டத்தில் 24 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர், வவுனியா மாவட்டத்தில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.