25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சினிமா

கணவருக்கு ஓங்கி பளார் விட்ட நடிகை; கடுப்பான கணவர்; ஒவ்வொரு வீட்டிலும் செய்ய சொல்ல அட்வைஸ் வேறு!

அனைத்து மனைவிமார்களுக்கும் பிடிக்கும் மேஜிக் என்று சொல்லி காதல் கணவரை கன்னத்தில் அறைந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தயவு செய்து இதை வீட்டில் முயற்சி செய்யவும் என தெரிவித்துள்ளார் நடிகை அனிதா ஹசநந்தனி.

மனோஜ் பாரதிராஜாவின் வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனிதா ஹசநந்தனி. விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ரோஹித் ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அனிதா. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆரவ் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அனிதாவும், ரோஹித்தும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் கணவனும், மனைவியும் சேர்ந்து அவ்வப்போது காமெடி வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக் என்று கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அனிதா. அந்த வீடியோவை வெளியிட்டு, தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்கவும் என கூறியுள்ளார்.

அனிதா வெளியிட்ட வீடியோவை பார்த்த கணவன்மார்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், மேஜிக் என்று சொல்லி தன் புருஷனை கன்னத்தில் அறைந்துவிட்டார் அனிதா. புருஷனை அறைந்துவிட்டு சந்தோஷமாக சிரிக்கிறார். அவர் ரோஹித் ரெட்டியை இப்படி சப்புனு அறைந்து ஜாலியாக சிரிப்பது முதல் முறை அல்ல.

அனிதாவின் வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

குடும்பத்தில் கும்மியடிச்சிட்டு போயிடாத தாயி. அந்த ரோஹித் ரெட்டிக்காக பாவப்படுகிறோம். மனுஷன் அடிக்கடி அறை வாங்கி பப்ளிக்கில் அசிங்கப்படுகிறார். ஒரு அப்பாவி மனிதன் புருஷனாக கிடைத்தால் இப்படித் தான் கொடுமைப்படுத்துவீர்களா?.

க்யூட் தம்பதி. பார்க்க நன்றாக இருக்கிறு. ஆனால் இப்படி கணவரை அடிச்சு, அடிச்சு விளையாடுவது வேண்டாமே என தெரிவித்துள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment