25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
சினிமா

பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை: நியாயம் கேட்கும் சின்மயி

சென்னையில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவிகளுக்காக நியாயம் கேட்கிறார் பாடகி சின்மயி.

சென்னையில் இருக்கும் பி.எஸ். பி.பி. எனும் பிரபல பள்ளியில் வேலை செய்யும் ராஜகோபாலன் என்கிற ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலரும் இதை சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளனர். அந்த ஆசிரியர் குளித்துவிட்டு வெறும் துண்டுடன் ஆன்லைன் வகுப்பிற்கு வந்து மாணவிகள் முன்பு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக பாடகி சின்மயி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறாராம். இதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜகோபாலன் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக அந்த பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் ட்வீட் செய்ததை சின்மயி ரீட்வீட் செய்துள்ளார்.

கர்ணன் படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கேகே நகரில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியின் காமர்ஸ் வாத்தியார் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுப்பவர். அந்த மனிதரின் வகுப்பில் படிக்கும் ஒருவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே இதை போஸ்ட் செய்கிறேன். அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் போஸ்ட் செய்கிறேன் என்றார்.

இந்த விவகாரம் குறித்து அறிந்த திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்திருப்பதாவது,

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment