உலகம்

பிகினி அணிந்தால் கைது, நீச்சலுடை அதிகாரி ; வினோத பிகினி சட்டங்கள்!

பிகினி என்பது தற்சமயம் மிகவும் சாதாரண விஷயமாக காணப்படுகிறது. ஆனால், ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் வெளிநாடுகளில் பிகினிக்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. கைது, நீச்சலுடை போலீஸ், போன்ற தடை சட்டங்களும் இதில் அடங்கும்.

பெரும்பாலும் கடற்கரையிலும், நீச்சல் குளங்களிலும் பார்க்கும் பிகினி உடைகள் குறித்து சட்டம் இயற்றும் அளவுக்கு ஒரு காலத்தில் இந்த சமூகம் கலாச்சார காவலர்களாக இருந்துள்ளது. மேலும் அந்த உடைகளை கண்காணிக்க கடற்கரைக்கு ஒரு அதிகாரிகளை கூட நியமித்திருந்தது. விதிகளை மீறுவோர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள், உடைகளை மூடிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர் அல்லது கைது கூட செய்யப்பட்டனர்.

நீச்சலுடை காவலர்கள் என்ற உடனே, என்ன காவலர்கள் நீச்சலுடையில் இருப்பார்களா? என்று யோசிக்க வேண்டாம். நீச்சல் உடையில் இருப்பவர்கள் விதிகளை மீறினால் கைது செய்பவர்களே இந்த நீச்சலுடை காவலர்கள்.

பெண்கள் ஒரு காலத்தில் அசௌகரியமாக உணரக்கூடிய நீண்ட காலுறைகள், தரையை தொடக்கூடிய கௌன்கள் மற்றும் முழு நீள உடைகளையே கடற்கரையில் குளிக்கும்போதும் அணிய வேண்டியிருந்தது. அதனாலேயே 1900, 1920-கள் வாக்கில் நீச்சல் செய்வதற்கேற்ப சிறிய உடைகளை அணிய ஆரம்பித்தனர். அளவில் சிறியதாகவும் கை, கால்கள், தொடைகள், தோள்பட்டைகள் போன்றவற்றை அப்பட்டமாக வெளியே காட்டுவதாக இருந்ததாலும் அது சில சர்ச்சைகளையும் உருவாக்கியது.

எனவே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவின் சில முனிசிபாலிட்டிகள் முழங்காலுக்கு கீழ் ஆறு அங்குலத்துக்கு துணிகள் தைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து நீச்சல் உடைகளுக்கான அளவு விதியை சட்டமாக இயற்றின. யாரும் விதிகளை மீறாமல் இருக்க நீச்சலுடை காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, யாராவது விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவது , வலுக்கட்டாயமாக உடை மாற்றுவது, அபராதம் விதிப்பது என தண்டிக்கப்பட்டனர். இதற்காகவே சிகாகோவை சேர்ந்த கடலோர காவல்படை ஒரு பிரத்தியேக உத்தியை அமல்படுத்தினர். “கடற்கரை தையல்காரர்” ஒருவரை நிரந்தரமாக கடற்கரையிலேயே பணியமர்த்தி அங்கு கழுத்தில் குறைந்த அல்லது கால் முட்டிக்கு மேலே நீளம் குறைந்த உடை அணிந்து வந்தால் உடனே அதை சரி செய்து தைக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

பெண்கள் அணிய அனுமதிக்கப்பட்டிருக்கும் நீச்சல் உடைகள் மிகவும் பருமனாகவும், நீண்டதாகவும் இருந்ததால் தொழில்முறை நீச்சல் வீராங்கனைகளுக்கு அது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த விளையாட்டின் மீது பல ஆண்டுகளாக மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே பெண்களுக்கான பிரத்தியேக நீச்சல் உடைகளை தயாரித்து அதன்மூலம் அவர்கள் இந்த நீச்சல் உடை பிரச்சனையை சமாளித்தனர். அப்போது அதுபோன்ற தெற்கு பகுதியை சேர்ந்த நீச்சல் வீராங்கனை அனெட் கெல்லர்மேன் 1907ஆம் ஆண்டு பாஸ்டன் கடற்கரைக்கு தொழில்முறை நீச்சல் உடையை அணிந்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரே திறமையாக நீதிமன்றத்தில் வாதாடி வென்றார். அனுமதிக்கப்பட்ட உடைகள் மற்றும் நீச்சலுடை சட்டங்கள் பெண்கள் நீந்த தடையாக இருப்பதாகவும், பெண்களுக்கும் நீரில் சுதந்திரமாக நீந்த உரிமை இருப்பதாகவும் வாதிட்டார். அமெரிக்க பெண்களுக்கு சிறந்த நீச்சல் உடைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தன்னுடைய நீச்சல் உடைகளையே வெளியிட்டார்.

1920 மற்றும் 1930 ஆண்டுகளில் நீச்சலுடை சிறியதாகவும் ஸ்லீவ்லெசாகவும் மாறுதல் அடைந்திருந்தது. இருப்பினும் பல பெண்களுக்கு அது பொருந்தாததாகவும், போதுமானதாகவும் இல்லை. அந்த சமயத்தில் கோகோ சானல் சூரிய ஒளியில் உடலின் நிறம் செந்நிறமாக மாறக்கூடிய கலவைநிறத்தை பிரபலப்படுத்த, உற்சாகமான சில புத்திசாலிகள் இதையே காரணமாகக் கொண்டு ஸ்லீவை கீழே இறக்குவதும், ஸ்கர்ட்டை மேலும் மேலே உயர்த்தி அளவை குறைக்கவும் ஆரம்பித்தனர். அதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு பிரெஞ்சு பொறியாளரான லூயிஸ் ரீடு நீச்சல் வீரர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பிரத்தியேக நீச்சல் உடையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இருப்பினும் இந்த இரண்டு துண்டு (2 Piece Bikini ) துணி சில பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தியது. ஐரோப்பிய பெண்கள் இந்த பிகினி உடைகளை மிகவும் வேகமாக பற்றிக் கொண்டனர். ஆனால் அமெரிக்கப் பெண்கள் மத்தியில் இது மெதுவாகவே ஊடுருவியது. பிகினியை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியதில் முக்கியமானவர் யுருசுலா ஆண்டரஸ். 1962- இல் அவர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமான Dr. NO-க்கு பிறகு அமெரிக்க பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு பிகினியை வாங்கினர். பெண்ணியவாத இயக்கங்களின் முழுவீச்சிலான போராட்டங்களும் சேர்ந்து, அமெரிக்க கடற்கரையில் அமல்படுத்தப்பட்டிருந்த நீச்சலுடை சட்டங்களுக்கு முடிவு கட்டியது.

Acrobat arrested for wearing thong bikini to the beach | Metro News

பெண்கள் மட்டும் இது போன்ற சட்டங்களால் பாதிக்கப்படவில்லை. ” கடற்கரையில் யாரும் கொரில்லாக்களை பார்க்க விரும்பவில்லை” என நியூஜெர்சியின் அட்லாண்டிக் சிட்டி கவுன்சில், ஆண்கள் கட்டாயம் மேல்சட்டை அணிய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது . மேற்சட்டை அணியாமல் வெளியிலோ, கடற்கரையிலோ சுற்றித்திரிந்தால் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் அல்லது அபராதம் விதிக்கப்பட்டனர். ஆனால் 1937-இன் தொடக்கத்தில் இந்த சட்டங்கள் வெகுவாக திரும்பப் பெறப்பட்டன. மீண்டும் சூரிய ஒளியின் கதகதப்பை ஆண்களின் மார்புகள் அரவணைக்க தொடங்கின.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Related posts

17நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு!

divya divya

சிரிய இராணுவப் பேருந்தில் குண்டுவெடிப்பு: 14 இராணுவத்தினர் பலி!

Pagetamil

‘என்ன வேணா நடக்கட்டும்… சந்தோசமாக நாம இருப்போம்’: மியான்மர் இராணுவம் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!