கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பாடகியாக மட்டுமல்லாமல் அழகியாகவும் வலம் வந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த இவருக்கு, இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையில் ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா அன்பே வா’ பாடலை பாடி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா கோஷல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, துலு, பெங்காலி, போஜ்பூரி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.நான்கு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் சிநேகிதனான ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா உலகில் பலரின் வாழ்த்துக்களை பெற்ற இந்த தம்பதியினருக்கு, திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரேயா கோஷல், ‘சீக்கிரமே அம்மாவாக போகிறேன்’ . குட்டி ஸ்ரேயா ஆதித்யா கம்மிங்.. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்வதில் எனக்கும், கணவருக்கும் டபிள் ஹாப்பி என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில்,`கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி’ என பகிர்ந்துள்ளார்.