வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலிற்கு அதிபர்கள் சங்கம் கண்டனம்!

Date:

கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கமலராஜன் மீது ஒய்வு நிலை பணியாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.

இவ்விடயம்தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது .

அவ் அறிக்கையில்-

கடந்த 19ஆம் திகதி காலை கல்விப்பணிப்பாளர் அவரது கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து முன்னாள் பாடசாலை பணியாளர் ஒருவரால் உடல்ரீதியாக மோசமாகத் தாக்கப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது.

கல்விசார் பணி என்பது சமூக நலனை முதன்மைப் படுத்தும் பணி. இதில் வலயத்துக்கு தலைமை தாங்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் முக்கியமானவர். தார்மீக அடிப்படையில் இவ்வாறு பணி செய்பவர்கள் வன்முறைக்கு உள்ளாவது என்பது இந்த பிரதேச மக்களின் வன்முறை உணர்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அது கிளிநொச்சி வாழ் சகலரது செயலுக்கும் ஒப்பானது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதில் குறிப்பாக தனது பணி நிலையில் ஓய்வு பெற்ற ஒரு மூத்த ஊழியர் ஈடுபட்டமையால் இந்த வலய பணிமனை முன்னெடுக்கும் கல்விப்பணிசார் முகாமைத்துவத்தை செயற்பாடுகளை தாழ்த்தி மதிப்பிட்டமை அதிகாரத்
துஷ்பிரயோகமாக பணிகளை கருதுகின்றன. தலைமை தாங்குபவரை அவரின் வினைத்திறனை உயர்வாக கருதாமையே என பார்க்கப்படுகிறது. இவ்வாறான எண்ணப் பாங்கு தாழ்வான சமநிலை குலைவான நிலை ஏற்பட்டுள்ளமையை காட்டுகிறது.

மேலும் இது எமது சமூகம் குறிப்பாக கல்விப்புலம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் எதிர்வு கூறுகின்றது. எனின் இந்நிலையில் எதிர்கால சந்ததிக்கான கல்வியை புலமை செயற்பாடாக எவ்வாறு தீவிரமாகவும் வினைத்திறனாகவும் கண்ணியமாகவும் முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதனால் வலயத்தின் பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக உழைப்பவர்கள் ஆளுமைகள் எத்தகு மன உளைச்சலுக்கு ஆளாகுவர் என்பதும் ஏற்கனவே தாழ்நிலையில் இருக்கும் எமது பிரதேச கல்வி பண்பாட்டை முன்னெடுக்க முடியாது சிதைக்கும்
செயல் என்பதையும் நாம் இந்த வேளையில் மனவருத்தத்தோடு சுட்டிக் காட்டுகின்றோம்.

கல்விப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே தோல்விக்கு பொறுப்பு என்ற சமூக நிலை மிகவும் பிற்போக்கானது. மக்கள் அனைவரும் பொறுப்பு என்பதை சமூகம் புரிந்து எங்கு நடந்தாலும் அநியாயங்களை தடுத்தல் அவசியம்.

கடந்த காலங்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் வன்முறையாளர்கள் தாக்குதல்கள் செய்துள்ளமை அதற்கு சட்டரீதியாக காத்திரமான படிப்பினை தரும் நடவடிக்கைகளை சட்டத்துறை மேற்கொள்ளாமை என்பனவும் இத்தகு மோசமான நிலைக்கு காரணம் என்பதே எமது கணிப்பு ஆகும்.

எனவே கடமையிலிருந்த வேளை வலயத்தில் புகுந்து தாக்கியமை எமக்கு வேதனை அளிக்கிறது. சமூகம் இதனை புரிந்து கொள்ள வேண்டும். உரியவர்களுக்கு தங்களின் பிரச்சனைகளை அணுகுவதற்கும் சுமூகமாக தீர்வுகளை எட்டுவதற்கும் தெரிய வேண்டும். அல்லது பொருத்தமானவர்களின் ஆலோசனைகளை நாட வேண்டும்.

குறித்த வன்முறை மூலம் ஒரு சூழலில் சமநிலையை குலைத்துள்ளமை அசிங்கப்பட்டுள்ளமை இப்பிரதேச கல்வி வரலாற்றுக்கு ஏற்பட்ட கறையாகவே அதிபர் சங்கம் கருதுகிறது.

எனவே வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலை கல்விப் பணி செய்யும் சகலர் மீதான அவமதிப்பாக கருதுகிறோம். அவ்வாறான அவமதிப்புக்கு யாரும்
இச்செயலமைப்பை உட்படுத்த முடியாது என்பதை அனைத்து சமூகத்திற்கும் வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம். இதனை தொடர்ந்து நடக்காது சூழலை மாற்றும் அணுகுமுறைகளை சமூகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது கோரி நிற்கிறோம்.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்