27.5 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா உலகம்

ஸ்புட்னிக் உற்பத்தி ஆகஸ்டில் தொடங்கும்: ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் உற்பத்தி இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார். இது தவிர தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஏற்கெனவே 2.1 லட்சம் டோஸ் மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஜூன் மாதம் 50 லட்சம் குப்பிகள் அனுப்பப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஸ்புட்னிக் விநியோகம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். முதலாவதாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட் டுள்ளன.
மூலப்பொருள் அதிக அளவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும். இவை உடனடியாக பயன்படுத் தும் வகையிலானது. இவை இந்தியாவில் குப்பிகளில் அடைக்கப்பட்டு பின்னர் உபயோ கத்துக்கு அனுப்பப்படும்.

மூன்றாவது கட்டமாக ஸ்புட்னிக் மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்திய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு அந்நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்யும். மூன்று கட்ட நடவடிக்கையிலும் ஒட்டுமொத்தமாக 8.5 கோடி குப்பிகள் இந்தியாவுக்குக் கிடைக் கும் என்று அவர் கூறினார்.

`ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி மருந்துக்கும் இந்தியாவில் அனுமதி கிடைக்கும் என்று குறிப்பிட்டார். ரஷ்யாவில் லைட் மருந்தையும் பரிந்துரைத் துள்ளதாகவும், இந்தியாவில் இதற்கான அனுமதி இன்னும் முழுமையடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
`ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி மருந்து 79.4 சதவீத நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக உள்ளது. இது ஒரு முறை போட்டுக்கொண்டால் போதுமானது. இரண்டு முறை தடுப்பூசி போடுவதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறனைவிட ஒரு முறை போடக்கூடிய `ஸ்புட்னிக் லைட்’ மருந்து சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

Leave a Comment