25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகள் கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தில் இதன் பாதிப்பு நீரிழிவு நோயாளிகளை அதிகமாகவே தாக்கிவருகிறது. இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கொரோனாவிலிருந்து பாதுகாக்க என்ன செள்!ய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. நீரிழிவு இருப்பவர்கள் கொரோனா இல்லாமல் தங்களை பாதுகாத்துகொள்ள என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம் என்பது குறித்து தான் இங்கு தெரிந்து கொள்ள போகிறோம்.

​கொரோனா நோய்த்தொற்று

உலகம் முழுவதிலும் தொற்றுநோய் பரவி பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறையையே புரட்டியுள்ளது. அப்படியான தொற்றுநோய் பரவலில் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது பெருமளவு அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றை தவிர்க்க சுகாதாரத்துறை மக்களுக்கு பல வழிகாட்டுகளை காட்டியுள்ளது. அதில் சர்க்கரை நோயாளிகளுக்கும் முக்கியமான வழிகாட்டுதல் பலவும் உண்டு. கொரோனாவால் மன அழுத்த பாதிப்பை கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதன் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சர்க்கரை நோயாளிகள், இதய நோய், பக்கவாதம் மற்றும் வயதானவர்கள் போன்ற அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று அதிகரிக்கும் அபாயம் உண்டு. நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

​நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா ஆபத்து

நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று அதிக ஆபத்து இருப்பதால், நோய்த்தொற்றின் தீவிரம் SARS கடுமையான சுவாச நோய்க்குறியுடன் வரும் சிக்கல்களின் அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை நோயாளிகள் தொற்றுநோயை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானாது. கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய உடன் பருமனான மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள் நீரிழிவு நோயாளிகளாக மாறியுள்ளார்கள்.

இதனால் உடல் செயல்பாடு குறைவு, மோசமான உணவு தேர்வுகள், மன அழுத்தம் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரைகள், அதிகரித்த பி.எம்.ஐ. போன்றவை அதிகரிக்க செய்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து பார்க்கலாம். கொரோனா காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சரியாக சாப்பிட வேண்டிய ஐந்து விதமான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

​சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்


கொரோனா நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம் பாதுகாப்பாக இருப்பதுதான். அதில் முதலாவது சரியான நேரத்தில் உணவை எடுப்பதுதான்.

சீரான இடைவெளியில் உணவை திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் அதிகப்படியான உணவை எடுத்துகொள்வதை தடுக்க செய்யலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரைகளை ஒழுங்குப்படுத்தலாம். அளவிடப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை அளிக்ககூடும்.

காலையில் எழுந்த 1 மணி நேரத்துக்குள் சாப்பிட பழகுங்கள். ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்துக்கும் ஒரு முறை சாப்பிடுங்கள். நன்றாக திட்டமிடப்பட்ட உணவுகள் மூன்று முறை எடுத்துகொள்ளுங்கள். இடையில் இரண்டு சிற்றுண்டிகள் எடுக்கலாம். இரவு 9 மணிக்குள் உணவை முடித்துவிடுங்கள். படுக்கும் போது ஒரு கப் பால் எடுத்துகொள்ளுங்கள்.

​முழு தானியங்களை சேர்க்கவும்

உணவில் 3 முதல் 4 தானியங்களை சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். இது உடல் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க செய்யும். இது உடலில் மெதுவான மற்றும் நிலையான கார்ப்ஸ் விநியோகத்தை உறுதி செய்கின்றன.

முழு தானிய இழை இரத்தத்தில் குளுக்கோஸின் வெளியீட்டை குறைக்க செய்கிறது. அதே நேரத்தில் பல நன்மை பயக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. தினைகள் இரத்த சர்க்கரைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தானியத்தை சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

புரோட்டின் அவசியம் சேருங்கள்

புரதங்கள் ஆரோக்கியமான உடலை உருவாக்குவதில்லை. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்கள் படி ஒரு வயது வந்தவருக்கு போதுமான புரதம் உட்கொள்ளல் அவசியம் கிலோவுக்கு 0. 8 கிராம் வரை எடுக்கலாம்.

குறைந்த கார்ப்ஸ் உடன் கூடிய அதிக புரத உணவுகள் பின்பற்றப்படலாம். இதை மருத்துவர்கள் உடன் ஆலோசித்து எடுப்பதை உறுதி செய்யுங்கள். புரதம் மிக உயர்ந்த சர்க்கரைகளை கட்டுப்படுத்துவதாக காட்டியுள்ளன.

பருப்புகள், தாவர புரதங்கள், ராஜ்மா, கொண்டைக்கடலை, காராமணி போன்றவை சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடியவை. மீன்கள், கோழி, முட்டை போன்றவை குறைந்த நிறைவுற்ற கொழுப்பு விலங்கு புரதங்களையும் பாதுகாப்பாக சேர்க்கலாம்.

கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்பு உள்ள பால், புரதங்களை சேர்க்கலாம். தயிர் சிறந்த புரோபயாட்டிக் ஆகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சர்க்கரை கட்டுப்பாடுகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

​கொழுப்பு எண்ணெய்கள் மற்றும் கொட்டைகள்

கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணேய், ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற தாவர மூலங்களிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகள் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை ஆரோக்கியமான கொழுப்பு தேர்வுகளுடன் மாற்றுவது இரத்த சர்க்கரைகள் மற்றும் இன்சுலின் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் காட்டுகிறது.

கொட்டைகள் ஒரு அவுன்ஸ் மற்றும் விதைகள் சாப்பிடுவது நல்லது. வாரத்தில் மூன்று முறையாவது கொட்டைகள் மற்றும் விதைகள் எடுத்துகொள்வது சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும். இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யகூடியது.

​பழங்கள் மற்றும் காய்கறிகள்

காய்கறிகள் மற்றும் சாலட்கள் எப்போதும் தட்டில் நிறைந்திருக்க வேண்டும். பருவகாலத்துக்கேற்ற காய்கறி

கள் மற்றும் வண்ணமயமான பழங்களை தேர்வு செய்யுங்கள். வெள்ளை, சிவப்பு, கீரைகள், ஆரஞ்சு போன்றவற்றை சேருங்கள். இது நார்ச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின்கள், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்றவை கொண்டிருப்பதால் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். நாள் ஒன்றுக்கு இரண்டு பழங்கள் சேர்ப்பது சிறிய அளவு கார்ப்ஸ் வழங்க கூடும். இது நல்ல சிற்றுண்டியும் கூட இதில் நார்ச்சத்து மற்றும் எலக்ட்ரொலைட்டுகள் உங்களை முழுமையாக வைத்திருக்கின்றன. இது சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க செய்யும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment