Pagetamil
லைவ் ஸ்டைல்

கோடை வந்தாலே வியர்வை நாற்றம் : நாற்றத்தை போக்க உதவும் வழிகள் ஆறு!

கோடை வந்தாலே வியர்வை நாற்றம் பொதுவானது. ஆனால் ஏற்கனவே இந்த பிரச்சனையை கொண்டிருப்பவர்களுக்கு இந்த கோடை காலத்தில் இன்னும் அதிகமான நாற்றத்தை உண்டாக்கும்.உடல் துர்நாற்றம் சாதாரணமானது. கோடையில் அக்குள் காலங்களில் உண்டாகும் துர்நாற்றம் இன்னும் மோசமான உபாதையை உண்டாக்கலாம். வழக்கமான குளியலும் வாசனை திரவியங்களும் இந்த சிக்கலை தீர்க்க முடியாது.இது வெளி இடங்களில் தர்ம சங்கடத்தை உண்டாக்கும். இந்த அசெளகரியமான சிக்கலை தீர்க்கவும் அக்குள் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் உதவும் வழிகள் குறித்து பார்க்கலாம்.

பாக்டீரியா எதிர்ப்பு பாடி வாஷ்

​பாக்டீரியாவை குறைப்பதன் மூலம் உடலில் துர்நாற்றம் வராமல் செய்து கொள்ளலாம். உடல் பாடி வாஷ் செய்வதற்கான பென்சோல் பெராக்ஸைடு சேர்த்தவற்றை பயன்படுத்துங்கள். இது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை குறைத்து வெளியேற்ற செய்யும்.

இதனால் உடல் நாற்றம் பெருமளவு தடுக்கப்படும். தினமும் இரண்டு முறை குளித்து காலை இரவு என இரண்டு வேளையும் பாடி வாஷ் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

​ஆப்பிள் சீடர் வினிகர்

பாக்டீரியாவை எதிர்த்து போராட ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம். இது சருமத்தின் பி.ஹெச் அளவை சமநிலைப்படுத்தலாம். இது சரும நாற்றத்தை குறைக்க செய்யும். ஆப்பிள் சீடர் வினிகர் அமிலத்தன்மை வாய்ந்தது.

இது வாடை வெளியேற்றும் என்று நினைக்க வேண்டாம். ஆப்பிள் சீடர் வினிகர் உலர்ந்தவுடன் இதன் நாற்றம் குறைந்து விடும். அக்குளில் இருக்கும் முடிகளை நீக்கும் நாட்களில் மட்டும் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

​அக்குளை உலர்வாக வைக்கவும்

அக்குள் நாற்றத்தை போக்க டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் உண்டு. இது உடல் நாற்றத்தை போக்க பயன்படும் என்றாலும் இதை சரியான முறையில் பயன்படுத்தினால் தான் அக்குள் வாடை வெளிவராமல் இருக்கும். அக்குளை உலர்வாக வைத்த பிறகு இந்த டியோடரண்ட் பயன்படுத்தினால் வாடை குறைவாக இருக்கும்.

​பொருளை மாற்றி பயன்படுத்துங்கள்

அக்குள் நாற்றத்துக்கு டியோடரண்ட் பயன்படுத்திய பிறகும் நாற்றம் மறையவில்லை எனில் நீங்கள் பயன்படுத்தும் பிராண்ட் மாற்றி விடலாம். சமயங்களில் சில டியோடரண்ட்கள் வேதியியல் மாற்றத்தால் அது சருமத்துக்கு ஆகாமல் இருக்கும். இது துர்நாற்றத்தை அதிகரிக்க செய்யும். அதனால் நிங்கள் பயன்படுத்தும் பொருளை மாற்றி பயன்படுத்தலாம்.

​சானிடைசரை பயன்படுத்துங்கள்

நீங்கள் டியோடரண்ட்க்கு மாற்றாக சானிடைசரை பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுவதால் இதை பயன்படுத்தலாம். இந்த சானிடைசர் துர்நாற்றத்தை போக்க செய்யும். இந்த சானிடைசர் பயன்பாடு சருமத்துக்கு நன்மை என்றாலும் முடி அகற்றிய பிறகு ஷேவிங் செய்த பிறகு சானிடைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

​வியர்வையை குறைக்கும் அக்குள் திரவம்

வியர்வையை குறைக்க கைகளின் கீழ் திரவம் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இந்த திரவத்தை இரவு நேரங்களில் பயன்படுத்துவதால் வியர்வை சுரப்பிகளில் ஊடுருவி வியர்வையை எதிர்த்து போராடுவதற்கு செய்கிறது.

இது 24 மணி நேரம் வரை நீடிக்க செய்யும். இதை தினசரி தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் அக்குள் வாடை வராமல் தவிர்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

Leave a Comment