26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இந்தியா

ஒரு நபர் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை போடலாமா? டாக்டர் வி.கே.பால் விளக்கம்!

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டளவிலும் இது சாத்தியம் என்றும், ஆனால் இதை பரிந்துரைப்பது ஒரு சம்பந்தப்பட்ட சூழ்நிலையை பொறுத்தது என்றும் காலத்தால் மட்டுமே பதிலளிக்க முடியும் என்றும் கூறினார்.

“ஒரு நபர் முதல் டோஸில் பெற்ற மருந்திலிருந்து வேறுபட்ட தடுப்பூசி மூலம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட முடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். அறிவியல் மற்றும் கோட்பாட்டளவில் இது சாத்தியம். ஆனால் இதை பரிந்துரைப்பது வளர்ந்து வரும் நிலைமையை பொறுத்தது. இதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் எதுவும் தற்போது இல்லை. காலம் மட்டுமே சொல்லும்.” என டாக்டர் வி.கே பால் கூறினார்.

பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் மேலும் தெளிவுபடுத்தினார்.

“தடுப்பூசிக்குப் பிறகு தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு ஓரிரு நாட்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று தகவல்கள் வந்தன. ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எந்த சூழ்நிலையிலும், ஒரு மணி நேரம் கூட தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ அந்த சூழலில் எந்த காரணமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு குறித்து பேசிய வி.கே.பால் 10-17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு செரோபோசிட்டிவிட்டி விகிதம் தோராயமாக 30-40 க்கு சமமாக இருப்பதாகவும், குழந்தைகளும் தொற்றுநோயை பரப்பக்கூடும் என்றும் கூறினார்.

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை குறித்து பேசிய அவர், மருந்துகளின் கிடைக்கும் தன்மை அதிகரித்து வருவதாக கூறினார்.

நீரிழிவு நோய், ஸ்டெராய்டுகளின் பயன்பாடு காரணமாக நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைதல், நீண்டகாலமாக மருத்துவமனையில் தங்கியிருத்தல் போன்ற நோய்கள் கொரோனா உள்ளபோது மியூகோர்மைகோசிஸ் தொற்றுநோயை அதிகரிக்கக்கூடும் என்பதால் ஸ்டெராய்டு மருந்துகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

Leave a Comment