கொரோனா தேவி சிலை பார்ப்பதற்கு தன்னை போலவே இருப்பதாக வைரலாகும் மீம்ஸிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
கொரோனா முதல் அலை உலகத்தையே வாட்டி எடுத்த போது, அதைப்பற்றி மீம்ஸ் போட்டு அலற விட்டவர்கள் நமது நெட்டிசன்கள். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைக்கு அதைவிட ஒருபடி மேலே போய் சிலை வைத்து அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த சிலையின் முகம் வனிதா விஜயகுமார் முகத்தை போலவே உள்ளதாக ஏகப்பட்ட மீம்கள் ச மூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. விஞ்ஞானம் மூலம் மக்களை காப்பாற்ற மருத்துவ வல்லுனர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் மூடநம்பிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர், கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தி பல விவாதங்களை கிளப்பி வருகின்றனர்.
அந்த வகையில் கோவையில் உள்ள மக்கள் ஒருபடி மேலே சென்று கொரோனாவிற்கு சிலை வைத்து அதற்கு கொரோனாதேவி என பெயரிட்டு பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகி வருகின்றன. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்களும், முண்களப் பணியாளர்களும் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராமல் உழைத்து வரும் நிலையில், சில மக்கள் மூட நம்பிக்கைகளில் திளைப்பது பெரும் வருத்தத்தைதையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விஷயத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், கொரோனா தேவி சிலை, வனிதா விஜயகுமார் போல இருப்பதாக பல மீம்ஸ்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அவ்வாறு வெளியான மீம்ஸ்களில் ஒன்றை ட்விட்டரில் வனிதா விஜயக்குமாரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த வனிதா விஜயகுமார், அடக்கடவுளே.. என்னது இது.. இதை ஏன் எல்லாரும் எனக்கு ஷேர் பண்றீங்க என ட்விட் போட்டுள்ளார். இதே போல், என்னடா கொரோனா தேவிக்கு சிலை வைக்கிறேன்னு வனிதாவுக்கு சிலை வச்சிருக்கீங்க என்பதை போன்ற மீம்சை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ஜெய் கொரோனாதேவி என்று கேப்ஷன் போட்டுள்ளார். அவரின் இந்த பாசிட்டவான அப்ரோச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.