பிரபலமான செய்தியிடல் தளம் ஆன வாட்ஸ்அப் சில காலமாக அரட்டை இடம்பெயர்வு (Chat Migration) மற்றும் ஒத்திசைவு (Sync Features) அம்சங்களில் செயல்பட்டு வருகிறது, இப்போது இது செய்தியிடல் தளத்தின் அம்சங்களை மேம்படுத்தும் ஒரு அம்சத்தைக் கொண்டுவர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
WABetaInfo இன் தகவலின்படி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் விரைவில் பயனர்கள் தங்கள் அரட்டைகளை வேறு தொலைபேசி எண்ணுக்கு மாற்றவும் அனுமதிக்கும்.
தற்போதுவரை, உங்கள் வாட்ஸ்அப் chat backup ஐ restore செய்ய விரும்பினால், உங்கள் தொலைபேசியில் பழைய சாதனத்தில் இருந்த அதே எண் மற்றும் OS இருக்க வேண்டும்.ஆனால், இப்போது இந்த Migration அம்சம் சோதனை முறையில் உள்ளது, எனவே பயனர்கள் தங்கள் செய்திகளை புதிய தொலைபேசி எண்ணுக்கு மாற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப்பின் iOS-Android Migration கருவியுடன் அரட்டை வரலாற்றை மாற்ற முடியாது, உங்கள் கணக்கில் புதிய Android தொலைபேசியை இணைத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
அதோடு, வாட்ஸ்அப் மீடியா கோப்புகளையும் மாற்று தொலைபேசி எண்ணுக்கு மாற்றும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS தொலைபேசிகளுக்கான chat migration அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது என்பதையும் WABetaInfo தெரிவித்துள்ளது.