2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன அபராதத்தை நாடு பூராகவும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அபராத தொகையை செலுத்துவதற்கான 14 நாட்களை கடந்த போதிலும் மேலதிக எவ்வித கட்டணமும் இல்லாமல் அபராத தொகையை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சலுகை காலம் மீள அறிவிக்கும் வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1