பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ. 2 லட்சம் நிதி அளித்துள்ளார். இதையடுத்து பொன்னம்பலம் அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் வந்து மிரட்டிய பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் அறுவை சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் அளித்துள்ளார்.
சிரஞ்சீவி செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பொன்னம்பலம். அந்த வீடியோவில் பொன்னம்பலம் கூறியிருப்பதாவது,
Megastar Chiranjeevi @KChiruTweets garu transferred an amount of 2 Lakh rupees to Artist #Ponnambalam for his kidney transplant operation. pic.twitter.com/LzLhRQPSlJ
— We Miss You BA Raju Garu (@vamsikaka) May 21, 2021
சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ரொம்ப நன்றி அண்ணன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த ரூ. 2 லட்சம் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. உயிருள்ள வரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. அந்த ஆண்டவர் உங்களை எப்பொழுதும் சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணன் என தெரிவித்துள்ளார்.
பொன்னம்பலத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் உதவி செய்தார்கள். மேலும் பொன்னம்பலத்தின் குழந்தைகளின் கல்வி செலவை கமல் ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தன் உடல்நிலை குறித்து பொன்னம்பலம் கூறியதாவது,
எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக் கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக் கொண்டார் என்றார்