கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, நாட்டில் தற்போதுவரை 420 மருத்துவர்கள் உயிர் இழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) இன்று தெரிவித்துள்ளது. டாக்டர்கள் சங்கம் வெளியிட்ட தரவுகளில் டெல்லியில் மட்டும் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது அலையின் போது எந்தவொரு மாநிலத்திலும் பதிவான மருத்துவ இறப்புகளில் இது அதிக எண்ணிக்கையாகும். பீகாரில் 96 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 31 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது அலையின் போது நோய்த்தொற்றின் புதிய மையமாக உருவான மகாராஷ்டிரா 15 இறப்புகளைப் பதிவு செய்தது.
ஐ.எம்.ஏ தரவுகளின்படி, முதல் அலையின் போது மொத்தம் 747 மருத்துவர்கள் உயிர் இழந்தனர். அதில் மிக அதிகபட்சமாக 91 மருத்துவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 81 மருத்துவர்கள், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 71 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 70 பேர், அசாமில் இருந்து 20 பேர், பீகாரில் இருந்து 38 பேர், சண்டிகர் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த தலா 8, கோவா, மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இருந்து 3, குஜராத்தைச் சேர்ந்த 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதே போல் டெல்லியைச் சேர்ந்த 23 கர்நாடகாவைச் சேர்ந்த 68 பேர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர், ஜார்க்கண்டிலிருந்து 19 பேர், கேரளாவிலிருந்து 4 பேர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 பேர், மேகாலயா மற்றும் திரிபுராவிலிருந்து தலா 1, பாண்டிச்சேரியிலிருந்து 2, ஒடிசாவிலிருந்து 14, பஞ்சாபிலிருந்து 20, ராஜஸ்தானிலிருந்து 17, தெலுங்கானாவிலிருந்து 12, உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து 5 பெரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 65 பெரும் உயிரிழந்துள்ளனர்.