கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரழிவு போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய் மருந்தின் காரணமாகவே, இதுபோன்ற நோய்கள் உருவாவதாக கூறப்படுகிறது. இது மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 5 புதிய நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய் குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், 2 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதன்படி,
1: கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
2: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.