கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,62,89,290
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,57,299
இதுவரை குணமடைந்தோர்: 2,30,70,365
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,630
கொரோனா உயிரிழப்புகள்: 2,95,525
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,194
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 29,23,400
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,33,72,819
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,64,84,155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,66,285 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.