வடமாகாணத்தில் நேற்று 77 கொரோனா தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 1,272 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில் 62 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவர்,
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர்,
வவுனியா பொது வைத்தியசாலையில் 3 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 3 பேர்,
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 3 பேர்,
யாழ் மாவட்டத்தில், யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர் (71 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் வைத்தியசாலையில் 3 பேர்,
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் சிறைச்சாலையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.