ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கையில் இரண்டு வார லொக் டவுன் நடைமுறைப்படுத்தப்படாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அதகவலகள் தவறானவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போது அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஜூன் 1 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு லொக் டவுன் அமுல்ப்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.




