27.4 C
Jaffna
March 20, 2023
குற்றம்

மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (20) மாலை கைப்பற்றியுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சுமார் 5கிலோ 575கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு பேசாலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி, மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்களான சோமயித், இந்திக்க, உப பொலிஸ் பரிசோதகர்களான விவேகாணந், ஆனந்த ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதியையும், அதனை தன் வசம் வைத்திருந்த காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் முத்து குழுவை வெட்டிய சுந்தர் குழு!

Pagetamil

தோடம்பழ வியாபாரியுடன் ஓடிச்சென்ற 13 வயது மாணவி 6 நாட்கள் வீதியோரம் வாழ்ந்தார்!

Pagetamil

வைத்தியசாலை பெண்கள் விடுதிக்குள் நுழைந்து உள்ளாடைகள் திருடியவர் கைது!

Pagetamil

14 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற 20 வயது காதலன் கைது!

Pagetamil

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!