உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

Date:

அந்தார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை நேற்று உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பூமியின் தென்கோடியில் அமைந்துள்ள அந்தார்டிக்கா கண்டத்தில் இலட்சக்கணக்கான பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன. புவி வெப்பமயமாதலை இந்தப் பனிப்பாறைகளே சமன் செய்து வருகின்றன. இதனிடையே, மக்களின் வாழ்வியல் மாற்றங்கள், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வருடங்களாக அந்தார்டிக்காவில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அந்தார்டிக்காவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை நேற்று உடைந்தது. வேடேல் கடலில் அமைந்திருந்த இந்தப் பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. புவி வெப்பமயமாதலே இந்தப் பனிப்பாறை உடைந்ததற்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, அந்தார்டிக்காவின் வடக்கே இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் உடைந்து நொறுங்கியது. இது பிரான்ஸின் பாரீஸ் நகரை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அந்தார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸ் ஆகும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்