25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

ட்ரூகாலருக்கு ஆப்பு வைக்க தயாராகும் கூகிள்!

கூகிள் I / O 2021 நிகழ்வில் ஆண்ட்ராய்டு 12 OS உட்பட பல புதிய அம்சங்களையும் புதுப்பிப்புகளையும் கூகிள் வெளியிட்டது. இதில், Android பயனர்கள் Phone App இல் Announcer ID உட்பட பல புதிய அம்சங்களையும் பெற முடியும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. எளிமையாகச் சொன்னால், உங்கள் Android சாதனத்தில் உள்ள Google Phone App இப்போது Turecaller செய்யும் வேலையைச் செய்து விடும். எனவே நீங்கள் ட்ரூகாலர் என்ற ஒன்றை தனியே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நமக்கு அடிக்கடி பலரிடம் இருந்து நிறைய அழைப்புகள் வரும், அவற்றில் சில சாதாரணமான நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து வரும். ஆனால், பலவும் டெலிமார்க்கெட்டிங் உட்பட பல தெரியாத நபர்களிடம் இருந்து வருபவை.

கூகிள் இப்போது Phone App இல் ‘Announce Caller ID’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.

Android பயனர்கள் இப்போது Always On, ஹெட்செட்டைப் பயன்படுத்தும் போது மட்டும் (Only when using a headset) அல்லது உங்களை அழைக்கும் நபருக்கு அறிவிக்க வேண்டாம் (Never to announce the person calling you) எனும் மூன்று விருப்பத்தைக் காண்பிக்கும். இவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வுச் செய்யும் போது உங்கள் தொலைபேசியில் பெயர் சேமிக்கப்படாவிட்டால், எண் அறிவிக்கப்படும்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அம்சம் முன்னிருப்பாக disable செய்யப்பட்டிருக்கும். புதிய புதுப்பித்தலுடன், பயனர்கள் தங்கள் அழைப்புகளுடன் யாரிடம் இருந்து அழைப்பு வருகிறது என்பதை காண விரும்பினால் மூன்று விருப்பங்களுக்கிடையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

புதிய Announce Caller ID அம்சத்தை செயல்படுத்த விரும்பினால், பின்வரும் வழிமுறையை நீங்கள் பின்பற்றலாம். முதலில், உங்கள் போனில் கூகிள் Phone App ஐ திறந்து Android device > Settings > Caller ID Announcement Google தொலைபேசி பயன்பாட்டைத் திறக்கவும்.

மேற்சொன்ன மூன்று விருப்பங்களில் உங்கள் விருப்பத்தை இங்கே நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஐபோனுக்கான ஆப்பிளின் iOS இயங்குதளம் அதன் Phone பயன்பாட்டிற்கும் இதே போன்ற அம்சத்தைக் கொண்டுள்ளது, இது இப்போது Android பயனர்களுக்கும் இப்போதுதான் கிடைக்கிறது.

உங்களை யார் அழைக்கிறார்கள் என்பதை அடையாளம் காண உதவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றான ட்ரூகாலர் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment