உங்களின் ராசிக்கு தொழில், உத்தியோகத்தில் இருக்கும் தனி திறமை என்ன தெரியுமா?

Date:

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சிறப்பாக வாழ இரவும், பகலும் பாராமல் கடினமாக உழைக்கிறோம். நமக்கும், நம் குடும்பத்தினரும் நல்ல பலனைப் பெறவும், சுகமாக வாழ்வும் நம் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம் மகிழ்ச்சியை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு நம் வருவாய் அதிகரிக்க எந்த அளவு மன அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்படுபவர்களாக இருக்கிறோம். ஜோதிடத்தின் படி நம் ராசிக்கு எப்படிப்பட்ட பெரிய தொழில்,வியாபார திறமை, எதையும் எதிர்கொள்ளும் வலிமை உள்ளது என்பதைப் பார்ப்போம்.

கும்பம்

கும்ப ராசியினர் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கொண்டவர்கள். மிகுந்த மனிதாபிமானம் கொண்ட இவர்கள் எந்த ஒரு பணியிலும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அதுவே அவர்களின் மிகப்பெரிய பலமாகும்.

மேஷம்

மேஷ ராசியினர் மற்றவர்கள் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் போட்டியைத் தரக்கூடியவர்கள். சிறந்த தலைமைத்துவ திறமையைக் கொண்ட இவர்கள், மிகவும் தைரியமானவர்களும் கூட. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவர்கள். தங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல நிர்வாக மற்றும் பெரிய பதவியில் திறம்பட சமாளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

​கடகம்

கடக ராசியினரின் பெரிய நல்ல குணம் என்றால் மற்றவர்களை நேசிப்பதும், பரிவுணர்வு கொண்டதாக இருப்பதும் தான். மற்றவர்களைச் சிறப்பாக கவனித்துக் கொள்வதோடும், விருந்தோம்பல் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நர்சிங், வீட்டு பராமரிப்பு, ஹோட்டல் மேலாண்மை போன்ற துறைகளில், பதவிகளில் சிறந்து விளங்குவார்கள்.

​மகரம்

மகர ராசியினர் இயற்கையில் மிகவும் லட்சியமானவர்களாகவும், தாங்கள் விரும்பியதை அனைத்தையும் அடைய விரும்பக் கூடியவர்கள். மேலும், அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய யாரையும் சார்ந்து இருப்பதில்லை. ஆகவே, அவர்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

​மிதுனம்

மிதுன ராசியினர் மிகுந்த அறிவார்ந்தவர்கள். சிக்கலான வேலையைக் கூட, எளிய வழியில் செய்து முடிக்கக்கூடிய திறன் வாய்ந்தவர்கள். இவர்கள் கற்றலிலும், புதிய விஷயங்களை கற்று மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதிலும் கெட்டிக்காரர்கள். இவர்களுக்கு, எழுத்து, பேச்சு, கற்பித்தல் மற்றும் மொழி பெயர்ப்பு போன்ற தொழிலில் வெற்றிகரமாக இருப்பார்கள்.

​சிம்மம்

சிம்ம ராசி அதிபதி சூரியன் நவகிரகங்களின் தலைவர். அதே போல மற்றவர்களுக்கு தலைவனாக இருக்க விரும்புபவர்கள் சிம்ம ராசியினர். ஆசை மட்டுமல்ல அதற்குரிய திறமையும், ஆளுமைத் திறன் மிகுதியாக வைத்திருப்பவர்கள். அதனால் இவர்கள் ஏதேனும் வேலையில் மற்றவர்களுக்காக வேலை பார்க்க நினைப்பதை விட, தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற அளவிற்கு எண்ணத்தைக் கொண்டிருப்பது நல்லது. இவர்கள் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளாக ஜொலிப்பார்கள்.

​துலாம்

துலாம் ராசியினர் எப்போதும் மன சமநிலையும், நல்லிணக்கத்தையும் கொண்டவர்கள். இதனால் நம்பமுடியாத நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களை உருவாக்குகிறார்கள். மேலும், இவர்கள் பொறுமையாகவும், நட்பாகவும் இருப்பதால், கற்றலிலும், கற்பிப்பதிலும் சிறந்தவர்கள்.

​மீனம்

மீன ராசியினர் மிகவும் கற்பனை திறன் கொண்டவர்கள். இவர்கள் அழகு கலைஞர்கள், உளவியலாளர்கள் மற்றும் ஜோதிடர்களை உருவாக்குகிறார்கள். ஆச்சரியப்படத்தக்கத் திறமை கொண்ட இவர்கள் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு வியப்பைத் தரும்.

​தனுசு

தனுசு ராசியினர் எந்த ஒரு தடைகள் அல்லது விதிகளை நினைத்து கவலைப்படுவதில்லை. இவர்கள் எப்படிப்பட்ட கடினமான சூழலிலும் தங்களுடைய தனித்திறமையால் வெற்றியைப் பெற முயல்வார்கள். முற்போக்கான கொள்ளைகள் இவர்கள். பொதுவாகவே மிக நல்லவர்களாக எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைப்பார்கள்.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினர் நேர்மையான, விசுவாசமான மற்றும் நம்பகத்தன்மை மிக்கவர்கள். இவர்கள் நீண்ட கால குடும்பம், திருமண உறவை உருவாக்குவதிலும், மற்றவர்களுடன் அற்புதமான நல்லுறவும், நட்பு கொள்ள ஆழமாக செயல்படுவார்கள். இவர்கள் நல்ல உளவியலாளர்களாகவும், மனநல மருத்துவர்களாகச் செயல்படுவார்கள். மற்றவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள்.

​ரிஷபம்

இவர்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய மிகச்சிறந்த வல்லுநர்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் கணக்கிட்டு சிறப்பாக செய்து முடிக்க நினைப்பார்கள். இவர்களின் சரியான கணிப்பால் அவர்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

இவர்களின் மிகச்சிறந்த பலம் என்னவென்றால் சரியான முதலீடு அறிவு, நிதி ஆலோசனை மற்றும் சரியாக கணிப்பதும், கணக்காக செலவிடுவதும் தான். இதனால் பெரியளவில் முன்னேற்றத்தையும், பதவிகளையும் பெறுவார்கள்.

​கன்னி

மிகவும் கடின உழைப்பு, உறுதியான மற்றும் லட்சியமானவர்கள் தான் கன்னி ராசியினர். இவர்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள். இவர்களுக்குரிய தொழில் வலிமையைப் பற்றி பேசுகையில், கன்னி ராசியினர் மிக அற்புதமான எழுத்தாளர்களையும், ஆசிரியர்களாக நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்