26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!

சில பழங்களை நாம் மரத்திலிருந்து எடுத்து அப்படியே நேரடியாக உண்ணலாம், சிலவற்றை உலர்த்தி பதப்படுத்தி வைத்து சாப்பிடலாம். எல்லா பழங்களிலும் நமக்கே தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளது. அவற்றில் பாலைவன பகுதிகளில் விளைந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் பேரீச்சம் பல முக்கியத்துவம் பெறுகிறது.

இது பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். இந்த பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோருமே சாப்பிடலாம். இது எல்லோருக்குமே பிடித்த ஒரு பழமாகவும் இருக்கிறது. இந்த பழங்கள் பெரும்பாலும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இப்போது நம்ம ஊர்களிலேயே பலரும் இதை பயிர் செய்ய துவங்கிவிட்டனர்.

இந்த பதப்படுத்தப்பட்ட பழங்கள் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவம் போன்றவற்றில் எல்லாம் இந்த பேரீச்சம் பலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பேரீச்சம் பழம் என்பது சூரிய சக்திகளை எல்லாம் தன்னிடத்திலேயே கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் A, B, B2, B5 மற்றும் வைட்டமின் E ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பேரீச்சம் பழத்தில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் இதில் வைட்டமின்கள் B1, B2, B3, B5, A1, C, புரதம் மற்றும் ஃபைபர் ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன.

பேரீச்சம் பழத்தில் பலவிதமான அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றுடன் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகளும் உள்ளது, எனவே இந்த பழத்தை தினமும் உட்கொண்டால், செரிமான அமைப்பின் செயல்பாடு மேம்பட்டு செரிமான பிரச்சினைகள் நீங்கும்.

பேரீச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இன்னும் அதிகமாக, நீங்கள் தினமும் பாலுடன் பேரீச்சம் பழத்தை உட்கொண்டால், உடல் சோம்பல் நீங்கி, ஆற்றல் அதிகரிக்கும்.

பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது, எனவே நீங்கள் இதை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதை ஆண்கள் தினசரி உட்கொண்டால் பக்கவாதம் ஏற்படும் பிரச்சினை குறையும்.
தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு சீராக குறையும்.

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளது, எனவே இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது நன்மை தரக்கூடியது.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தண்ணீரோடு பேரீச்சம் பழத்தையும் உட்கொண்டால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.

இரவில் ஆட்டின் பாலில் ஒரு சில பேரீச்சம் பழங்களை ஊறவைத்து, மறுநாள் காலையில் பாலுடன் அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து குடித்தால் உடலுக்கு அசுர பலம் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment