26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
கிழக்கு

தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் இன்றும் 9 பேருக்கு தொற்று!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்களுக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 45 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில் தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெறுவதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

east tamil

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

east tamil

Leave a Comment