25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

டவ் தே சூறாவளிப் புயலின் தாக்கத்தால் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாத மழைப்பொழிவு!

சாதனை அளவாக இன்று காலை 8:30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் டவ் தே சூறாவளிப் புயலின் தாக்கத்தால் டெல்லியில் 119.3 மிமீ மழை பெய்தது. இதன் மூலம் மே மாதத்திற்கான முந்தைய கால அனைத்து பதிவுகளையும் இது முறியடித்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 1976’ஆம் ஆண்டு மே 24 அன்று பெய்த 60 மி.மீ. தான் மே மாதத்தில் டெல்லியில் பெய்த உச்சபட்ச மழை அளவாகும்.

டெல்லியின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 23. 8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. மே மாதத்தில் வழக்கத்தை விட 16 டிகிரி குறைவான இது, 1951 முதல் மே மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

“புதன்கிழமை காலை 8:30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8:30 மணி வரை டெல்லியில் 119.3 மிமீ மழை பெய்தது. இது மே மாதத்திற்கான புதிய சாதனையாகும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

லோதி சாலை வானிலை நிலையத்தில் 124.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாலம், அயனகர், நஜாப்கர் மற்றும் எஸ்.பி.எஸ் மயூர் விஹார் பகுதிகளில் முறையே 64 மிமீ, 98 மிமீ, 92.5 மிமீ மற்றும் 95.5 மிமீ மழை பெய்தது.

டெல்லி, உத்தரபிரதேசம், வடக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த மழையானது, சூறாவளி புயலான டவ் தேவின் தாக்கத்தால் உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறுகையில், “பொதுவாக இந்த காலத்தில் டெல்லி வறண்டு இருக்கும். பொதுவாக, டெல்லியில் இந்த மாதத்தில் அதிகபட்சம் 30 மிமீ அல்லது 40 மிமீ (24 மணி நேர மழை) கிடைக்கும்.

மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக நீடிக்கும். ஆனால் நேற்று பெய்த இந்த மழை அரேபிய கடலில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால் ஆனது. இவ்வாறு நடப்பது மிகவும் அரிதானது, எனவே இவ்வளவு மழை ஆச்சரிம் தான். எனினும் இன்று மழை குறைய வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment