30.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
சினிமா சின்னத்திரை

டவ்தே புயல் பாதித்த இடங்களுக்கு நடுவே நடனமாடிய நடிகை!

டவ்தே புயலால் சாய்ந்த மரங்களுக்கு நடுவே நடனமாடி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நடிகை தீபிகா சிங்கிற்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் கடுமையான சேதங்கள் உருவாகின. இது மட்டுமல்லாமல் பல உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது டவ்தே புயல். மேலும் இந்த புயல் குஜராத், கர்நாடகத்தில் பெருமளவில் பொருட் சேதத்தையும், உயிர் பழியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையில் இந்திய மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறைகள் போன்ற காரணங்களால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை பல உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த புயலால் கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.

டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இந்நிலையில் ‘டவ்தே’ புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடி, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை
தீபிகா சிங். அவரின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தள பக்கங்களில் ஏராளமான எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.

Deepika Singh Goyal criticised for dancing in rain wrought by Cyclone Tauktae, says 'can't calm the storm, so stop trying' || புயல் பாதிப்புக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்த நடிகை ...

புயலால் மக்கள் பலத்தை சேதத்தையும், பெரும் இழப்பையும் சந்தித்துள்ள நிலையில் நடிகை தீபிகா சிங்கின் இந்த பொறுப்பில்லாத செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தனது பதிவில் புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் தீபிகா சிங். புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் போது, உங்களுக்கு இந்த கிளாமர் ஆட்டம் தேவைதானா என்றும் கேள்விகள் கேட்டு விளாசி வருகின்றனர் ரசிகர்கள்.

WTF Wednesday: Diya Aur Baati Hum actress Deepika Singh Goyal's dancing video in Cyclone Tauktae is the last thing we needed

இதனிடையில் டவ் தே புயலால் தனது வீட்டிற்கு வெளியே மரம் விழுந்ததாகவும், அதனை தானும் தனது கணவரும் அப்புறப்படுத்த முயன்றதாகவும் தெரிவித்துள்ள தீபிகா சிங், டவ்தே புயல் நினைவாக சில போட்டோக்களை எடுத்ததாக விளக்கம் கூறியுள்ளார். ஆனாலும் இந்த கொரோனா கால கட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வீதியில் கிளாமர் ஆட்டம் போட்ட நடிகை தீபிக்க சிங்கிற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!