விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஷகிலா. அதில் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். இதற்கு முன்பு கவர்ச்சி நடிகையாக சினிமா துறையில் அறியப்பட்டஅவர், குக்வித் கோமாளி ஷோவுக்கு வந்த வந்த பிறகு அம்மா என்கிற இமேஜ் பெற்றார். அதற்கு புகழ் தான் காரணம். ஷகிலாவை அம்மா என அவர் அடிக்கடி அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு பல்வேறு தமிழ் படங்களில் ஷகிலா காமெடியான வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால் கவர்ச்சி நடிகை என்கிற இமேஜ் மாறாமல் இருந்தது. அதை மாற்றியது குக்கு வித் கோமாளி இரண்டாவது சீசன் தான். அதைப் பற்றி அவரே மிகவும் பெருமையாக அந்த ஷோவில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குக்கு வித் கோமாளிக்கு பிறகு ஷகிலாவுக்கு தற்போது ஒரு பட வாய்ப்பு வந்ததாம். ஆனால் அதில் ஒரு குளிக்கும் சீன் இருக்கிறது என அவர்கள் சொன்னதால் நடிக்க மறுத்து விட்டதாக கூறியிருக்கிறார் ஷகிலா.
தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஹிந்தியில் படமாக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வாழ்க்கையில் ஏமாந்தது போல தற்போது சினிமா துறைக்கு வரும் இளம் பெண்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும் ஷகிலா அட்வைஸ் கூறி இருக்கிறார்.