இரத்த பரிசோதனைக்கு சென்று தாதியுடன் சில்மிசத்தில் ஈடுபட முயன்ற இளைஞன் கைது!

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவனை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (19) உத்தரவிட்டார்.

அந்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் (18) அதிகாலை 6 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞன் இரத்தத்தை பரிசோதனைக்காக ஊசிமூலம் எடுத்த பெண் தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தாதியர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 1 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்