நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு!

Date:

நேபாள நாட்டில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

நேபாள நாட்டில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம் ஹல்ப்ஹலி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய – மத்தியதரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் இன்னும் வெளியாகியுள்ளன. அதேபோல், நேபாளத்தின் போக்ஹரா பகுதியில் இருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 ஆக அந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்