ஓடிடி பக்கம் ஒதுங்கிய அஜித் பட ஹீரோயினின் புதிய திரைப்படம்!

Date:

தனது ‘ஷெர்னி’ திரைப்படம் ஜுன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக வித்யா பாலன் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வித்யா பாலன் நடிப்பில் கடைசியாக வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது வித்யா பாலனின் அடுத்த திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஷெர்னி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஜுன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக வித்யா பாலன் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டி சீரிஸ் தயாரிப்பில், ‘நியூட்டன்’ திரைப்படத்தை இயக்கிய அமித் மசுர்கார் ஷெர்னி படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன், ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மனிதர்களால் வனங்களுக்கும் வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதைச் சரிசெய்ய நினைக்கும் நேர்மையான வன அதிகாரி ஒருவரைப் பற்றியும் விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் வன அதிகாரியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கடந்த பிப்ரவரின் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஷெர்னி திரைப்பட வெளியீடு குறித்து

அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில், “இவள் தன் தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறாள். ஷெர்னியை ஜூன் மாதம் ப்ரைமில் சந்தியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

After the age of 40 I enjoy life Actress Vidya Balan || “40 வயதுக்கு பிறகே  வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” - நடிகை வித்யா பாலன்

நடிகை வித்யா பாலனும் ஷெர்னி திரைப்பட ரிலீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 2021 ஜுன் மாதத்தில் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும். அத்துடன் பயமின்றி இந்த உலகை காண வர போகிறாள். எனது புதிய படமான ஷெர்னி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜுன் மாதத்தில் பிரைம் வீடியோவில் ஷெர்னி என குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் போஸ்டரும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வனத்துக்கு நடுவில், துப்பாக்கியின் குறியில் வித்யா பாலன் சிக்கியிருப்பது போன்றும், அவர் கையில் வாக்கி டாக்கியுடன் நிற்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்