இலங்கை அரசின் 12 வது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 64 கடற்படை அதிகாரிகள் மற்றும் 1904 கடற்படை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 1,968 கடற்படை யினர் பதவி உயர்வு பெற்று தங்கள் அடுத்த உயர் பதவிகளுக்கு முன்னேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின்படி மே 19 முதல் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஒப்புதலின் பேரில், 1968 கடற்படை வீரர்கள் தங்கள் அடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்டனர்.
அதன்படி, கப்டன் பதவிக்கு 04 அதிகாரிகள், கொமாண்டர் பதவிக்கு 11 அதிகாரிகள், லெப்டினன்ட் கொமாண்டர் பதவிக்கு 27 அதிகாரிகள், லெப்டினன்ட் பதவிக்கு 01 அதிகாரி மற்றும் 21 பேர் கேடட்கள் மிட்ஷிப்மேன் பதவி உயர்வு பெற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1