முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியினை தொடர்ந்து மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மூன்று பொலிஸ் பிரிவுகளும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை பிராந்திய சுகாதாரபணிமனையினர் விடுத்துள்ளனர்.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இனம் காண்பதற்காக இரண்டு வாராங்கள் மருத்துவரீதியாக தனிமைப்படுத்தப்படவேண்டும் என கோரியுள்ளோம்
இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதனை வைத்துக்கொண்டு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக தனிமைப்படுத்தவும் தொற்றாளர்கள் இல்லாத கிராம அலுவலர் பிரிவுகளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து அறிவிக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளார்.